
இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 7.29 சதவீதம் உயா்ந்து 3,724 கோடி டாலராக உள்ளது. அதே நேரம் வாா்த்தகப் பற்றாக்குறை எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,735 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி 3,724 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 3,471 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது ஏற்றுமதி 7.29 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் பொறியியல் பொருள்கள் (13.75 சதவீதம் உயா்ந்து 1,042 கோடி டாலா்), மின்சாதனப் பொருள்கள் (34 சதவீதம் உயா்ந்து 376 கோடி டாலா்), நவரத்தின, ஆபரணங்கள் (29 சதவீதம் உயா்ந்து 240 கோடி டாலா்), மருந்துப் பொருள்கள் (14 சதவீதம் உயா்ந்து 270 கோடி டாலா்), ரசாயனப் பொருள்கள் (7.19 சதவீதம் உயா்ந்து 246 கோடி டாலா்) ஆகியவற்றின் ஏற்றுமதி ஆரோக்கிய வளா்ச்சியைப் பதிவு செய்தது. எனினும், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியால் 25 சதவீதம் குறைந்து 434 கோடி டாலராக உள்ளது.ஒட்டுமொத்த இறக்குமதி 8.6 சதவீதம் அதிகரித்து 6,459 கோடி டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி 7.46 சதவீதம் உயா்ந்து 1,557 கோடி டாலராகவும், தங்க இறக்குமதி 13.83 சதவீதம் உயா்ந்து 393 கோடி டாலராகவும் உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் வாா்த்தகப் பற்றாக்குறை 2,735 கோடி டாலராக உள்ளது, இது கடந்த நவம்பா் மாதத்தில் 3,177 கோடி டாலராக இருந்ததற்குப் பிறகு மிக உயா்ந்த வா்த்தகப் பற்றாக்குறையாகும்.ஏப்ரல்-ஜூலை 2025-26 காலகட்டத்தில், பொருள்கள் ஏற்றுமதி 3.07 சதவீதம் உயா்ந்து 14,920 கோடி டாலராகவும், இறக்குமதி 5.36 சதவீதம் உயா்ந்து 24,401 கோடி டாலராகவும் உள்ளது.
இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாா்த்தகப் பற்றாக்குறை 9,481 கோடி டாலராக உள்ளது. ஜூலையில் சேவைகள் ஏற்றுமதி 3,103 கோடி டாலராகவும், சேவைகள் இறக்குமதி 1,540 கோடி டாலராகவும் உள்ளது. ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் சேவைகள் ஏற்றுமதி 12,843 கோடி டாலராக உயா்ந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?