ஏழைகளை மட்டும் நாய் கடிப்பது ஏன்? - மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டு

ஏழைகளை மட்டும் நாய் கடிப்பது ஏன்? - மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி:

தெரு நாய் விவகாரம் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சரும் விலங்​கு​கள் நல ஆர்​வலரு​மான மேனகா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​யில் உள்ள நலச்​சங்​கத்​தினர், தெரு நாய்​களை பிடித்து செல்ல பணம் வழங்​கு​கின்​றனர். மாநக​ராட்​சி​யும் பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் உள்ள நாய்​களை பிடித்து ஏழைகள், நடுத்தர வர்த்​தகத்​துக்கு கீழுள்​ளவர்​களின் பகு​தி​களில் தெரு நாய்​களை விட்டு விடு​கின்​றனர்.


இது​தான் நாய்க்​கடிக்கு பாதிக்​கப்​படு​வோர் எண்​ணிக்கை அதி​கரிப்​ப​தற்கு காரணம். இந்த விஷ​யத்​தில் நாய்க் கடிகளால் பாதிக்​கப்​படு​வோர் யார்? ஏழைகள்​தான். பணக்​காரர்​கள் அல்ல. பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் நாய்​கள் எண்​ணிக்கை அவ்​வள​வாக இல்​லை. ஆனால், டெல்லி ரோகிணி காலனி போன்ற இடங்​களில் நாய்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் உள்​ளன.


கட்​டாய​மாக தெரு நாய்​களை இடமாற்​றம் செய்​வ​தால் 99 சதவீத நாய்க் கடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. தெரு நாய் விவ​காரத்​தில் டெல்லி மாநக​ராட்சி தோல்வி அடைந்​து​விட்​டது. நாய்​களுக்கு உணவளிக்​கும் இடத்தை அறி​வித்து அங்கு அறி​விப்பு பலகை வைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. ஆனால், ஒரு அறி​விப்பு பலகை கூட இது​வரை டெல்லி மாநக​ராட்சி வைக்​க​வில்​லை. இது நீதி​மன்ற அவம​திப்​பாகும். இவ்​வாறு மேன​கா காந்​தி கூறி​னார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%