காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!


வேலூர், ஆக. 24-

 வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடந்தது.

 காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை இடைவிடாது நடந்தது. இதில் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்களை பெற்றனர். இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஊராட்சி மன்ற தலைவி கனகவல்லி நேரு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 

 இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜாப்ராபேட்டை ஊராட்சி மன்ற தலைவி கனகவல்லி நேரு செய்திருந்தார். இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%