சேலம் ராமகிருஷ்ணர் கோவிலில் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம்

சேலம் ராமகிருஷ்ணர் கோவிலில்  31ம் தேதி மகா கும்பாபிஷேகம்


சேலம், ஆக.24-

சேலத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம், , வரும் 31-ம் தேதி நடக்கிறது. 

இதுகுறித்து, ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் சுவாமி யதாத்மானந்தர் கூறியதாவது:

சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் 1968-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கோயிலில் புனருத்தாரணம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் 57 ஆண்டுகளுக்குப் பின்னர், வரும் 

31-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது, அனைத்துலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் தவத்திரு சுவாமி கவுதமானாந்தஜி மகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவில் 31-ம் தேதி காலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும், காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், மாலை 6.45 மணிக்கு தரிசனம் ஆகியவையும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை சுகவனேஸ்வரர் கோயிலின் சிவாச்சாரியார் நீலகண்ட சிவம் நடத்தி வைக்கிறார். விழாவில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுவாமிகள் 70 பேர் வருகின்றனர். மேலும்5ஆயிரத்துக்கும் மேற்பட்ட , பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். 

இவ்வாறு அவர்கூறினார்.

 நிர்வாகிகள் சந்திரசேகரன், விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%