கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநில செயற்குழு கூட்டம்
Sep 10 2025
10

மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் பெரம்பலூரில் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர்கள் ராமர், வெங்கடேசன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கவுரவ தலைவர் விஷ்ணுதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் கள் சிவப்பிரகாசம், ஜெயராமன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், வாழ்வாதார ஓய்வூதியம் மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் கிராமிய அஞ்சல் ஊழியராக பணியமர்த்தப் பட்டவர்கள், பழைய ஓய்வூதியம் பெற உரிமை பெற்றவர்கள் 30 ஆயிரம் பேருக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கோட்ட பொறுப்பாளர்கள், பணி ஓய்வுபெற்ற கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநிலச் செயலாளர் ராஜு வரவேற்றார். மாநில பொருளாளர் ராம லிங்கம் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?