வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 10.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 10.09.25



தமிழ் நாடு இ பேப்பரின் வாசக உறவுகள் அனைவருக்கும் அன்பான முதல் வணக்கம்.


பேரரசர் அக்பர் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.


அகபர் மனம் சோர்வுற்று தளரும் போதெல்லாம் அவர் ராஜ்ஜியத்தில் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட புகழ் பெற்ற ஃசூபியை ( சித்தர்கள் மாதிரி இஸ்லாம் சமயத்தில் 

ஞானிகளை இப்படி குறிப்பிடுவார்கள்)

சந்திப்பாராம்.

அந்த ஃசூபியின் போதனைகளை கேட்டு 

சிந்தை தெளிந்து அரண்மனைக்கு திரும்புவாராம்.

மன்னாதி மன்னர் ஆயிற்றே அக்பர்.

அதனால் அடிக்கடி பிரச்சினைகள் வந்து 

மனம் கலக்கம் வரும் தானே!


அவ்வாறு நிம்மதி இழந்து தவிக்கும் போதெல்லாம் ஃபரீதி 

என்றழைக்கப்பட்ட அந்த ஃசூபி பிரச்சனைக்கு தகுந்த படி பொருத்தமான கருத்துக்களை அறவுரையாக வழங்கி 

அக்பரை பக்குவப் படுத்தி வந்திருக்கிறார்.


ஒரு நாள் அரண்மனையில் இருக்கும் போது மன்னர் அக்பருக்கு திடீர் யோசனை ஒன்று உதயமாகி இருக்கிறது.


ஞானியாராகிய ஃசூபியிடம் எப்போதும் 

நாம் தானே போதனைகளை வாங்கிக் கொண்டே இருக்கிறோம்.

அவருக்கு நாம் இதுவரை பதிலாக எதுவும் வழங்கவில்லையே...

என்ற குற்ற உணர்ச்சி 

வருகிறது.


இந்த எண்ணம் வந்த

அடுத்த கணம் அமைச்சரை அழைத்தார் அக்பர்.


" நம் அரண்மனையில் இருக்கும் மிக உயர்ந்த மதிப்புள்ள பொருளை கொண்டு வாருங்கள்"

என்று அமைச்சருக்கு ஆணை இடுகிறார்.


அமைச்சர் பதறி அடித்து கருவூல பொறுப்பாளரிடம் சென்று மன்னர் விருப்பத்தை சொல்கிறார்.


கணம் தாமதியாது கருவூல நிர்வாகி

உள்ளே சென்று பொருளோடு வருகிறார்.

அதைப் பார்த்ததும் 

அமைச்சருக்கு திகைப்பு...


மன்னர் மிக உயர்ந்த மதிப்புள்ள பொருளை அல்லவா கேட்டார்...

இதைக் கொண்டு வந்து இருக்கிறீர்களே " சற்று கோபத்துடனே கேட்டார்.


" அமைச்சர் அவர்களே!

கொஞ்சம் உற்றுப் பார்த்து சொல்லுங்க "


புலவர் கூறியதைக் கேட்டு அதைக் கையில் வாங்கி பார்த்தார் அமைச்சர்.

அசநது போனார்.

முழுவதும் நவ ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


மிகுந்த மகிழ்ச்சியுடன் 

அதை மன்னரிடம் கொண்டு வந்து கொடுத்தார் அமைச்சர்.


அதைப் பார்த்ததும் அக்பருக்கு கடுங் கோபம் பொத்துக்

கொண்டு வரவே,

மிகவும் பணிவுடன்,

" அரசரே! உற்றுப் பாருங்கள்" என்றார்.

அழகான கத்திரிக்கோல் முழுக்க 

நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன.

அதைப் பார்த்ததும் அக்பர் மனம் மகிழ்ந்து 

உடனே அந்த ஞானியாரைப் பார்க்க புறப்பட்டு போனார்.


தன் குடிசையில் வந்து நின்ற அக்பரைப் பார்த்ததும் ஃசூபி பரீத் 

புன்னகை புரிந்தார்.

ஆர்வம் கொப்பளிக்க,

" உங்களிடம் இருந்து பெறுபவனாகவே இத்தனை காலமாக இருந்து விட்டேனே..

கொடுப்பவனாக இல்லாது போய் விட்டேனே.... அதனால் தான் எங்கள் அரண்மனையில் மிகவும் உயர்ந்த மதிப்பிலான நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட இந்த கத்திரிக்கோலை உங்களுக்கு கொண்டு வந்தேன் " என்றார் பேரரசர் அக்பர்.


கத்திரிக்கோலை வாங்கிய அடுத்த நொடியில் அதை அக்பரிடமே திருப்பி கொடுத்தார் அந்த ஞானி.


வெலவெலத்துப் போனார் அக்பர்.


எவ்வளவு ஆர்வமாக --

விருப்பமாக கொண்டு 

வந்தேன்...திருப்பி தருகிறீர்களே...என்ன?"


பதட்டம் குறையாமல் கேட்டார் மன்னர்.

மீண்டும் புன்னகைத்தவாறே சொன்னார் ஃப்ரீதி...


" இதற்குப் பதிலாக ஒரு சின்ன ஊசியை மட்டும் தாருங்கள்.

சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறேன்..." என்றார் ஃசூபி.


" மிக உயர்ந்த பொருளை வேண்டாம் என்று மறுத்து விட்டு,

பைசாவுக்குப் பெறாத ஊசியை கேட்கிறீர்களே...ஏன்?"

புரியாத பதட்டத்தில் 

பேரரசர் கேட்டதற்கு ஞானியார் என்ன பதில் சொன்னார் தெரியுமா?


" அரசே! நீங்கள் கொடுத்த கத்திரி,

ஒன்றை இரண்டாக பிரிக்கும். நான் கேட்கும் ஊசி இரண்டை ஒன்றாக சேர்க்கும்.


பிரிப்பது பேதமை...

அது அஞ்ஞானம்.

இணைப்பதே ஞானம்."


இந்த எதிர்பாராத பதிலைக் கேட்டு புதிய வெளிச்சம் கிடைத்த 

பூரிப்பில் திளைத்தாராம் பேரரசர் அக்பர்.


அன்பார்ந்த வாசக உறவுகளே!


இந்தக் கதை இல்லை 

நடந்த உணமை சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.


முடிக்கும் போது முத்தாய்பாக ஒன்றை சொல்ல வேண்டும் அல்லவா?


'வாழ்க்கை என்பது பெறுவதற்கு அல்ல...

கொடுப்பதற்கே...'

என்ற பேருண்மையை நாம் புரிந்து கொண்டு 

வாழும் போது வாழ்க்கை அழகாகிறது. அற்புதமாகிறது.

கூடவே அர்த்தமும் ஆகிறது.


இந்த தருணத்தில் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வெளியீடான அருள் தரும் தெய்வம் இதழின் சர்குலேஷனை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றினால்....

யூ ஆர் வெரி கிரேட்!

வாழ்க வளமுடன் 



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%