குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை துவக்கம்

குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை துவக்கம்

குருவாயூர்,


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும். பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது. 108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும், இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.


தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது. மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம். குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்தே இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.


இந்தநிலையில், இந்தக் கோவில் புனித குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம் பெண் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டார்.


சோசியல் மீடியா பிரபலமான அந்தப் பெண் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். குருவாயூர் கோவிலில் ஹிந்து அல்லாத பிற மதத்தவர்களுக்கு அனுமதி கிடையாது.


அப்படி இருந்தும் ஜாஸ்மின் ஜாஃபர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கோவிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் மதியம் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையே, ரீல்ஸ் வெளியிட்ட ஜாஸ்மின் ஜாபர், அந்த வீடியோவை அழித்து விட்டது உடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%