சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை படம் பிடித்து ‘ஓஎல்எக்ஸ்’ தளத்தில் விற்பனை செய்த பலே திருடன்

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை படம் பிடித்து ‘ஓஎல்எக்ஸ்’ தளத்தில் விற்பனை செய்த பலே திருடன்

சென்னை:

சென்னை வியாசர்​பாடி, பி.பி. சாலை பகு​தி​யில் வசிப்​பவர் ரபேல் (63). வீட்​டின் அரு​கில் கார் பழுது பார்க்​கும் ‘ஒர்க் ஷாப்’ நடத்தி வரு​கிறார். கடந்த 10 நாட்​களுக்கு முன்பு ராணி (60) என்​பவர் அவரது காரை பழுது பார்க்க ரபேலின் பணிமனை​யில் விட்​டுச் சென்​றார். அந்த காரை கடை​யின் எதிரே உள்ள சாலை​யோரத்​தில் ரபேல் நிறுத்தி வைத்​திருந்​தார்.


இந்​நிலை​யில், கடந்த 1-ம் தேதி அந்த காரை யாரோ திருடிச் சென்​று​விட்​டனர். அதிர்ச்சி அடைந்த ரபேல் இது தொடர்​பாக வியாசர்பாடி காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் காரை திருடிச் சென்​றது கடலூர் மாவட்​டம், பேப்​பூர் தாலு​காவைச் சேர்ந்த அரவிந்த் (20) என்​பது தெரிந்​தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்​தனர்.


விசா​ரணை​யில் இந்த வழக்கு தொடர்​பாக வினோத தகவல் வெளி​யானது. அதாவது ராணி​யின் காரை ரபேல் கடை​யின் எதிரே சாலை​யோரம் நிறுத்​தி​னார். இதை நோட்​ட​மிட்ட பிரதீப் ராஜா என்​பவர், அவரது செல்​போனில் காரை படம் பிடித்​து, குறைந்த விலை​யில் விற்​பனை செய்​ய​வுள்​ள​தாக ஓஎல்​எக்ஸ் இணை​யதளத்​தில் விளம்​பரம் செய்​தார்.


பழைய கார்​களை வாங்கி விற்​பனை செய்​யும் அரவிந்த் இதைப் பார்த்​தார். உடனடி​யாக காரை வாங்​கிக் கொள்​வ​தாக கூறி பிரதீப் ராஜாவை போனில் அழைத்து ரூ.1.25 லட்​சம் விலை பேசி, பணத்​தைக் கொடுத்து காரை பெற்​றுக் கொண்​டார். தொடர்ந்து ரெக்​கவரி வாக​னத்தை வாடகைக்கு எடுத்​து, அதன் மூலம் காரை தனது இடத்​துக்கு எடுத்​துச் சென்​றார். எந்​த​வித ஆவண​மும் இல்லாமல் காரை வாங்​கிய​தால் அரவிந்த் கைது செய்​யப்​பட்​டார். போலீ​ஸார் கைது செய்​யும்​போது​தான் இந்த விவ​காரம் அரவிந்துக்கு தெரிய​வந்​தது.


அவரிட​மிருந்த காரும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. பழுது​பார்க்க விடப்​பட்ட காரை தனது கார் எனக்​கூறி விற்​பனை செய்த பிரதீப் ராஜா என்​பவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்​தவர்? அவரது பின்​னணி என்ன என போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%