டெல்லியில் எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய குடியிருப்பு: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Aug 13 2025
13

புதுடெல்லி, ஆக. 11–
டெல்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்லும்போது தங்குவதற்கு மத்திய அரசு வீடு ஒதுக்கீடு செய்து கொடுப்பது வழக்கத்தில் உள்ளது.
தற்போது எம்.பி.க்களுக்காக டெல்லி பாபா கரன்சிங் மார்க் பகுதியில் பிரமாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:– புதிய குடியிருப்புகளில் எம்.பி.க்கள் எந்தப் பிரச்சினையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களின் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த குடியிருப்பில் 180க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒன்றாக வாழ்வார்கள்.
வாடகை கட்டடங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கும் ரூ. 1,500 கோடி செலவாகும். இந்த செலவுகளைக் குறைப்பதற்காக புதிய கட்டடங்களை கட்டத் தொடங்குனோம். 2014 முதல் இதுவரை 350 எம்.பி.க்கள் குடியிருப்புகள் கட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, குடியிருப்புக் கட்டடப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளார்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
184 எம்.பி.க்களுக்கு...
5 அடுக்குமாடிகளைக் கொண்ட 4 தொகுதிளாக 25 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் 184 எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என ஆறுகளின் பெயரிடப்பட்டுள்ளது.
குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 5,000 சதுர அடி கொண்டவை. பெரிய மற்றும் விசாலமான வடிவமைப்புடன் 5 படுக்கை அறைகள், ஒரு பெரிய உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையலறை, விருந்தினர் உபசரிப்பு அறை, எம்.பி. முகாம் அலுவலக அறை, விருந்தினர் தங்கும் அறை ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
சுமார் 200 வாகனங்களை வளாகத்தினுள்ளே நிறுத்தவும் கீழ்தளத்தில் சுமார் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் இங்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுள்ளேயே உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சிக்காக சிறிய வசதிகளுடன் கூடிய பூங்கா போன்றவையும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?