சேலத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை கோரி 2,558 பேர் விண்ணப்பம் கலெக்டர் பிருந்தாதேவி தகவல்

சேலம், ஆக. 2–
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு 6க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேலம் கோரிமேடு, சுபம் ருக்மணி திருமண மண்டபம் மற்றும் நெய்காரப்பட்டி, மேட்டுத்தெரு வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை கலெக்டர் இரா.பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது:–
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 2549 கோரிக்கை மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 2558 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு 6க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேலம் கோரிமேடு, சுபம் ருக்மணி திருமண மண்டபத்திலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி நெய்காரப்பட்டி பகுதிக்கு உட்பட்டவர்களுக்கு மேட்டுத்தெரு வன்னியர் திருமண மண்டபத்திலும், மேட்டூர் நகராட்சி -5, 9, 10 வார்டுகளுக்கு உட்பட்டவர்களுக்கு மேட்டூர் அணை வார்டு 5, புனித வளனார் சமுதாயக்கூடத்திலும், வாழப்பாடி பேரூராட்சி -1, 2, 4, 5, 6, 7, 8, 9 வார்டுகளுக்கு வாழப்பாடி வார்டு - 13, காளியம்மன் கோவில் தெரு, வேல்முருகன் திருமண மண்டபத்திலும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், ஆணையம்பட்டி, கிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு ஆணையம்பட்டி சாய் கோகுல் திருமண மண்டபத்திலும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், தேவியாக்குறிச்சி, தென்குமரை, வடகுமரை, சார்வாய் பகுதிகளுக்கு தேவியாக்குறிச்சி எல்.ஆர் திருமண மண்டபத்திலும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு 6க்கு உட்பட்ட பகுதிகளுக்கு கோரிமேடு சுபம் ருக்மணி திருமண மண்டபம் மற்றும் நெய்காரப்பட்டி பகுதிக்கு மேட்டுத்தெரு வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிட ஏதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஆய்வின் போது கேட்டறியப்பட்டது என கலெக்டர் இரா.பிருந்தாதேவி தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?