தெற்கு ரெயில்வே புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக அருள் ஜோதி பொறுப்பேற்பு

சென்னை, ஆக. 2–
தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக கே. அருள் ஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதன்மைத் தலைவர், பாதுகாப்பு ஆணையர் மற்றும் பாதுகாப்புப் படையின் பொறுப்பை ஏற்றக் கொண்டு அருள் ஜோதி, 1995 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை பிரிவின் அதிகாரியான கே. அருள் ஜோதி, வடக்கு எல்லைப்புற ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை/சென்னை, கிழக்கு ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் பிற மண்டலங்களில் பல்வேறு பதவிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றினார்.
குறிப்பாக, 2019-2020 கொரோனா காலகட்டத்தில் தெற்கு ரயில்வேயின் டிஐஜி/ஆகப் பணியாற்றிய காலத்தில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், 503 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பான இயக்கத்தை ஒழுங்கமைப்பதில் ஆர்பிஎப் குழுக்களை வழிநடத்தினார்.
தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய ஈஸ்வர ராவ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த பொறுப்பை கே. அருள் ஜோதி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?