தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி திசையன்விளை மனோ கல்லூரி மாணவர்கள் 75 பேர் பங்கேற்பு.
Sep 12 2025
15

திசையன்விளை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வில், மாணவர்கள் உற்சாகமாக “விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் (VBYLD) 2026” ஆன்லைன் வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டி, இளைஞர் நலன் & விளையாட்டு அமைச்சகம் சார்பில் My Bharat Portal மூலமாக நடத்தப்பட்டது.
மொத்தம் 75 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர். பங்கேற்ற அனைவரும் விக்சித் பாரத் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பங்களிப்பிற்காக டிஜிட்டல் சான்றிதழ்களை பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்களின் ஆலோசனைப்படி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சு. பலவேசகிருஷ்ணன் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் சண்முகம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வு, இளைஞர்களின் தேசிய உணர்வையும், சமூக முன்னேற்றத்தில் பங்களிக்கும் மனப்பாங்கையும் வலியுறுத்துவதாக அமைந்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?