தேசிய கைத்தறி தினம்

தேசிய கைத்தறி தினம்

*தேசிய கைத்தறி தினம்: திசையன்விளை மனோ கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.*


திசையன்விளை:

நாட்டின் 11வது தேசிய கைத்தறி தின விழா திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி பாரம்பரியத்தையும் கைவினை மரபுகளையும் பேணும் நோக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் திரு. லில்லி அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வின் முக்கியப்புள்ளியாக, கைவினைத் தொழிலாளர்களின் உழைப்பையும், அவர்களது வாழ்க்கை நிலை மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு, கைத்தறி பயன்பாட்டை ஊக்குவிக்க, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கைத்தறியால் நெய்யப்பட்ட பாரம்பரிய சேலை, வேஷ்டி மற்றும் உடைகளை அணிந்து, பாரம்பரியத்தின் பெருமையை வெளிப்படுத்தினர். 


மேலும், கைத்தறி உடைகளை அணிவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதனால் கைத்தறி தொழிலாளர்களின் பொருளாதார உயர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்த விழா, பாரம்பரிய உடைகளின் மதிப்பை உணர்த்துவதுடன், நாட்டின் உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கும் ஒத்துழைக்கின்ற ஒரு சமூகப் பணியாக அமைந்தது. 

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டு நல பணிக்கிட்ட அலுவலர் முனைவர் பலவேச கிருஷ்ணன் செய்திருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%