
தெஹ்ரான்,
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் போர் மூண்டது. 12 நாட்கள் நடைபெற்ற இப்போரில் இஸ்ரேலில் 32 பேரும், ஈரானில் 1,060 பேரும் உயிரிழந்தனர். இந்த போரை தொடர்ந்து மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அசிஸ் நசீர்சாடிஸ் கூறுகையில், ஈரான் ராணுவத்திற்கு ஏவுகணை உற்பத்தி செய்வது முக்கிய பணியாக உள்ளது. இஸ்ரேலுடனான போருக்குப்பின் முன்னுரிமைகள் மாறிவிட்டன. பல நாடுகளில் ஈரான் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளது. அந்த தொழிற்சாலைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும்’ என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?