
டாக்கா,
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் பதவியேற்றார். அவர் ஓராண்டாக வங்காளதேசத்தின் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசு முறை பயணமாக இன்று வங்காளதேசம் சென்றுள்ளார். அவர் வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்தார். மேலும், வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனிசை இஷாக் தர் நாளை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 13 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வங்காளதேசம் சென்றுள்ளார்.
2 நாட்கள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் ஹலிடா சையா மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?