பெண்களின் ஆடைகள், பை; தோண்ட தோண்ட திடுக் தகவல்... கேரளாவில் சீரியல் கில்லர்?
Aug 07 2025
23

கொச்சி,
கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் செபாஸ்டியன் (வயது 68). ஜெயினம்மா என்ற பெண் காணாமல் போனார். அவருடைய கணவர் அப்பச்சன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி செபாஸ்டியனை கைது செய்திருந்தனர். ஜெயினம்மா படுகொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுபவர். பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த பகுதியில் வேறு 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சேர்தலா பகுதியருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியிலுள்ள செபாஸ்டியன் வீட்டில் சமீபத்தில் போலீசார் சோதனை செய்தனர்.
இதில், அதிர்ச்சியான விசயங்கள் தெரிய வந்தன. 20-க்கும் மேற்பட்ட மனித எலும்புகளின் பாகங்கள், பல் ஆகியவை எரிக்கப்பட்டு கிடந்தன. ரத்த கறையும், பெண்களின் ஆடை மற்றும் பெண்ணின் கைப்பை ஒன்றும் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை எல்லாவற்றையும் தடய அறிவியல் மற்றும் மரபணு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு காணாமல் போன பிந்து பத்மநாபன், 2012-ல் காணாமல் போன ஆயிஷா ஆகிய 2 பெண்கள் காணாமல் போனது பற்றி கோட்டயம் மற்றும் ஆலப்புழா போலீசாரின் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், செபாஸ்டியனுக்கு உள்ள தொடர்பு பற்றியும், அவருடன் கூட்டாளிகள் யாரும் உள்ளனரா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் படுகொலைகள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?