முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த "இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 7,800 பேர் சிகிச்சை பெற்று பயன்
Sep 05 2025
19

தருமபுரி, செப். 3–
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் "இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான ”நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை யை கட்டணமில்லாமல் தொடரலாம்.
தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் "இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?