மும்பை நிழல் உலக தாதாக்​களுக்கு சவாலாக இருந்த அருண் காவ்லிக்கு 17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்

மும்பை நிழல் உலக தாதாக்​களுக்கு சவாலாக இருந்த அருண் காவ்லிக்கு 17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்

புதுடெல்லி:

மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்​ளிட்​டோருக்கு சவாலாக இருந்​தவர் அருண் காவ்​லி (76). இவர் தனது ஆதர​வாளர்​களால் ‘அப்​பா’ என்று அன்​புடன் அழைக்​கப்​பட்​டார்.


இவர் வசித்த மும்​பை, பைகுல்லா பகு​தி​யின் தக்டி சாலை இவரது கோட்​டை​யாக இருந்​தது. ஓர் எளிய மராத்தி குடும்​பத்​திலிருந்து உயர்ந்து மும்பை தாதாக்​கள் உலகில் கொடிகட்​டிப் பறந்த காவ்​லி​யின் வாழ்க்கை திரைப்​படக்கதைகள் போல் உள்​ளது.


மெட்​ரிக் படிப்​புக்​குப் பிறகு சிறு வயதிலேயே காவ்லி குற்ற உலகில் நுழைந்​தார். 1980-களில், தனது நண்​பர் ராமா நாயக் கும்​பலுடன் இணைந்து பணி​யாற்​றத் தொடங்​கி​னார். அப்​போது அவருக்கு தாவூத் இப்​ராஹிம் மற்​றும் சோட்டா ராஜனை சந்​திக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. இவர்​கள் இரு​வரும் மும்பை நிழல் உலகில் வளர்ந்து வரும் தாதாக்​களாக இருந்​தனர்.


தாவூத்​தின் சட்​ட​விரோத ஆயுதங்​கள் மற்​றும் போதைப் பொருட்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு கொண்டு செல்​லும் பொறுப்பு காவ்​லிக்கு வழங்​கப்​பட்​டது. இந்த நட்பு சிறிது காலம் நீடித்​தது, ஆனால் கடந்த 1988-ல் தாதாக்​களுக்கு இடையி​லான மோதலில் காவ்​லி​யின் நெருங்​கிய நண்​பர் ராமா நாயக் கொல்​லப்​பட்​டார். இந்​தக் கொலைக்கு தாவூத் இப்​ராஹிம் காரணம் என காவ்லி சந்​தேகித்​தார். இது காவ்​லியை மிக​வும் காயப்​படுத்​தி​யது.


தாவூத்தை விட்​டுப் பிரிந்த காவ்லி சொந்த கும்​பலை உரு​வாக்​கி​னார். இதனால் காவ்லி - தாவூத் இடையே மோதல் வலுத்​தது. இதில் பல துப்​பாக்​கிச் சூடு மோதல்​களில் இருதரப்​பிலும் உயி​ரிழப்பு ஏற்​பட்​டது.


1993 மும்பை குண்டு வெடிப்​புக்கு பிறகு, நிழல் உலக தாதாக்​கள் பலரும் மும்​பையை விட்டு வெளி​யேறி தலைமறை​வாகினர். இதன்​பின், நிழல் உலகில் மற்​றொரு தாதா​வாக உரு​வெடுத்த ரவி பூஜாரி, காவ்​லிக்கு எதி​ராக ஒரு கும்​பலை உரு​வாக்​கி​னார்.


இரு​வருக்​கும் இடையே பல மோதல்​கள் நடந்​தன. ஆனால் காவ்​லிக்கு உள்​ளூர் மராத்தி சமூகத்​தின் ஆதரவு இருந்​தது. இந்தியாவுக்கு வெளியி​லிருந்து இயங்கி வந்த சோட்டா ராஜன் போன்ற பெரிய தாதாக்​கள் கூட காவ்​லியை எதிர்​கொள்ள முடியவில்​லை. பின்னர், காவ்லி அரசி​யலில் நுழைந்​தார். 2004-ல் அவர் அகில் பார​திய சேனா (ஏபிஎஸ்) என்ற கட்​சியை நிறு​வி​னார். இதன் சார்​பில் சின்ச்​போக்​லி​யில் வென்று எம்​எல்​ஏ​வா​னார்.


அரசி​யலிலும் மோதலில் சிக்​கிய காவ்​லி, 2008-ல் சிவசேனா கவுன்​சிலர் கம்​லேகர் கொலை வழக்​கில் சிக்​கி​னார். இதில் 2012-ல் காவ்லிக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இதன் காரண​மாக, நாக்​பூர் மத்​திய சிறை​யில் 17 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை அனுப​வித்து வந்​தவர், நேற்று உச்ச நீதி​மன்​றத்​தால் ஜாமீனில் விடு​தலை செய்​யப்​பட்​டார்.


இவரை நூற்​றுக்​கணக்​கான ஆதர​வாளர்​கள் ஊர்​வல​மாக அழைத்து வந்​தனர். மும்பை அரசி​யலில் காவ்​லி​யின் விடு​தலை பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவரது கட்​சி​யான ஏபிஎஸ்​, நகராட்​சித்​ தேர்​தல்​களில்​ புதி​ய போட்​டியை ஏற்​படுத்​தும்​ என்​று எதிர்​பார்க்கப்படுகிறது. 



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%