
கோவை, செப். 7-
கோவை, அருகே லாரி ஓட்டுனர் கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவையை அடுத்து மதுக்கரை, பிச்சனூர். ஊராட்சி வீரப்பனூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை வீட்டில் இறந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் குமா ரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். அந்த அறிக்கையில் குமாரின் பின் தலையில் மண்டை ஓட்டில் பிளவு ஏற்பட்டும், பெரும் காயம் இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது தாய் பூவாத்தாவிடம் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் எட்டி மடையைச் சேர்ந்த ஆனந்தகுமார் அவரது மகன் குமா ரின் நண்பர். அவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அவர்கள் இரண்டு பேரும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சத்தமாக பேசிக் கொண்டு இருந்தனர். இரவு அதிக நேரம் ஆனதால் தாய் பூவாத்தாள் தூங்க சென்று விட்டார். காலையில் வந்து பார்த்த போது அவ ரது மகன் இறந்து கிடந்தார். இது பற்றி வெளியில் சொன்னால் அவர் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பயந்து எதுவும் கூறவில்லை என்று போலீசாரிடம் தெரி வித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் துறையினர் ஆனந்த குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் குமாரின் வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டு இருந்ததாகவும், பிறகு அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் கூறி உள்ளார். ஆனால் குமார் அங்கேயே இருக்குமாறு நிர்பந்தித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே ஆனந்தகுமார் வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கூறி குமாரை பிடித்து தள்ளி விட்டார். இதில் அவர் கீழே விழுந்து உள்ளார். அதன் பிறகு அவர் எழுந்திருக்கவில்லை என்றும், இதனால் குமார் போதையில் கிடப்பதாக கருதி ஆனந்தகுமார் வீட்டிற்கு சென்று விட்டார். காலையில் அவர் இறந்தது தெரிய வந்துள்ளது. எந்த நோக்கமும் இன்றி தள்ளி விட்ட தால், குமார் இறந்து விட்டதாக கூறி உள்ளார். இதை யடுத்து காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்த குமாரை கைது செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?