வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமை வகித்தார். ஆசிரியர் பிரதிநிதி சார்லட் மணி தீர்மானங்களை வாசித்தார். மனர்கேணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடையில் பள்ளி படிப்பை நிறுத்திய மாணவர்கள் மீண்டும் உயர் கல்வி படிக்க ஏதுவாக செய்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முன்னதாக ஆசிரியை புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், செல்வராணி, கனகா, குலாம் மைதீன் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?