வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 15.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 15.08.25


அன்புடையீர் 


வணக்கம். 15.8. 25 சுதந்திர தின வாழ்த்துக்களுடன் வெளிவந்த தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் நமது வரலாற்றில் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை என்ற மோடிஜி அவர்களின் கூற்றைப் படித்தது வேதனையாக இருந்தது.

இன்றைய பஞ்சாங்கத்தை படித்து வெள்ளிக் கிழமையை சந்தோஷமாக தொடங்கினேன்.


திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மன மகிழ்ச்சி அடைந்தேன். சுதந்திரப் போராட்டத்தில் ஆன்மீக பங்களிப்பு என்ற செய்தி மிகவும் அருமை. பாராட்டுக்கள். திண்டிவனம் 22 வது வாரில் தாயுமானவர் திட்டம் தொடங்கியது என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது.


முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆன்லைன் முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டித்தது விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி. நலம் தரும் மருத்துவ பகுதியில் லேப்டாப் மொபைல் போனால் அதிகரித்துள்ள மலட்டு தன்மை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் கசாயம் மிகவும் அருமையான தகவல் இதனால் சளி இருமல் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவும்


தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் பல அரசு பள்ளிகள் மூடல் என்ற செய்தி வேதனையாக இருந்தது


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பீரா சுரேந்திர சாய் வரலாறு மிகவும் அருமை அவருடைய அஞ்சல் தலையை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருந்தது நல்ல தகவல்.


பல்சுவைக் களஞ்சியம் பக்கத்தை மிக ஆவலுடன் அருமையாக செய்திகளைப் படித்து தெரிந்து கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள். தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் மிகவும் நல்ல தகவல்களை சொன்னதால் ஆன்மீகத்தின் மீது இருந்த நாட்டம் அதிகமானது.


தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டிஜிபி சங்கர் ஜிவால் குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து சொன்ன படம் மிகவும் அருமை. ஆவலுடன் படிக்க வைத்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் குபேர விநாயகர் கண்கொள்ளாக் காட்சியாக பார்க்க வைத்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த சென்னையில் உள்ள 10 சிறந்த கடற்கரைகள் என்று இரண்டாம் பாகத்தை பார்த்தவுடன் எத்தனை கடற்கரைகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.


திமுக கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் என்ற செய்தி அரசியலை அழகாக படம் பிடித்து காட்டியது.


திருப்பதி வெங்கடேச பெருமாளுக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை பக்தர் ஒருவர் நன்கொடையாக கொடுத்த செய்தி மகிழ்ச்சியாக பார்க்க வைத்தது.


பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து தீவிரமாக செயல்பட முடிவு செய்தது அதிர்ச்சியான தகவலாக இருந்தது. அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் அதிர்ச்சி சம்பவம் வாஷிங்டனில் நடந்த அந்த செய்தியை படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது .


சுதந்திர தினம் பிறந்த இந்த நாளில் மிக அற்புதமான செய்திகளை சுதந்திரமாக படிப்பதற்கு கைப்பேசியில் தமிழ்நாடு இ பேப்பர் என்ற நண்பன் வர ஆனந்தமாக படித்து மகிழ்ந்தேன். இதை மிக அழகாகவும் பாங்குடனும் செய்யும் தமிழ்நாடுஇ பேப்பரின் ஆசிரியர் குடும்பத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%