
காசாங்காடு வீ.காசிநாதனின் 'ஒளிக்கதிராய் எழுந்தவன்' என்ற சிறுகதை உயர்ந்த லட்சியத்தை உணர்த்தும் சிறந்த சிறுகதையாக இருந்தது. மயில்சாமி என்ற சமூக ஆர்வலரின் உதவியால் படித்து முன்னேறி நல்ல பணியில் சேர்ந்த கதிர், தனது சம்பளத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கு ஒரு குழந்தையையாவது படிக்க வைக்கவேண்டும் என்றுசெலவு செய்வது பெருமிதத்தை தருகிறது.
ராதா பாலுவின் 'தந்தையின் கனவு' என்ற சிறுகதை கொஞ்சம் சோகமாக இருந்தாலும், கடைசியில் தாய் தந்தையை வந்துப் பார்த்து, அவர்கள் ஆதரவுடன் நவீன முறையில் விவசாயம் செய்ய முனைந்திருக்கும் கதிரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனியாவது அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்க இறைவன் துணைபுரிவார் என்று நம்புகிறேன்.
கயப்பாக்கம் இரா. இரமேஷின் 'கள்ளப்பா' தொடர் அழகழகான வர்ணணைகளுடன் ஒரு கவிதையை போல ரம்யமாக இருக்கிறது. நல்ல தனித்தன்மையான எழுத்து.
பூஜை அறையில் தண்ணீர் வைக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி எழுதப்பட்ட ஆன்மிக கட்டுரை சிறப்பு. பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைக்க வேண்டும் என்பதை நிறைய எடுத்துக்காட்டுகளுடன் கவிஞர் பாலசந்தர் எழுயிருந்ததை பாராட்டுகிறேன்.
வே.கல்யாண்குமாரின் 'பால்காரி' என்ற கவிதை அழகழகான வார்த்தைகளுடன் மனதைக் கொள்ளைக்கொண்டது. பால்காரி மீது ஒருவன் கொண்ட காதலை மிக அழகாக சொல்லி, ஒரு காதல் மயக்கத்தையே ஏற்படுத்திவிட்டார் இந்த கவிஞர்.
முத்து ஆனந்த்தின் 'அவரவரின் மனசாட்சி' என்ற சிந்தனைகள் சிறப்பாக இருந்தன. நல்ல நல்ல கருத்துகளை சுவையாக சொல்லியிருக்கிறார். இவைகளை படித்தபிறகு நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?