
சட்ட விரோதமாக
குடியேறியவர்களுக்கு வாக்குரிமை
கிடையாது என அமித்ஷா அறிவிப்பு
தாம்பரத்தில் அரசு தலைமை
மருத்துவமனை முதல்வர் திறந்து
வைத்தார். சட்டப் பிரச்சனைகளை
முதல்வர் மறைக்க நினைக்கிறார்
என அதிமுக குற்றசசாட்டு.
சங்கரன்கோவில் ஆடித்தவசு
திருவிழா கோலாலமாக
நடைபெற்றது . 22 இன்ஜினியரிங்
கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம்
ஒரு இடம் கூட நிரம்ப வில்லை.
மதுரையில் விஜய் கட்சி மாநாடு
பெரிய அளவில் நடைபெற உள்ளது
200 மீட்டர் நீளத்தில் நடை மேடை
அமைக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 11 முதல் மின்சார
ஏசி பஸ் இயக்கப்படும்.
முத்து ஆனந்த் அவர்களின் காதல்
கவிதை காதலுக்கு இலக்கணம்
வகுத்தது போல் உள்ளது.
முத்து ஆனந்த அவர்களின்
அவரவர் மனசாட்சி கட்டுரை
நல்ல மனதுடன் தர்மம் செய்ய
வேண்டும் என்ற உண்மையை
உணர்த்தியது. பாபநாசம் அருவியில்
குளித்தால் பாவங்கள் தீரும்
என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது
எய்ம்ஸ் கட்டுமான பணிகள்
ஜனவரியில் நிறைவடையும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்போடு நின்று விடாமல்
இருந்தால் சரி. மோடி பெங்களூர்
வருகை சிறப்பான ஏற்பாடுகளை
செய்து வருகிறார்கள்..
நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர்
சமோசா பிரச்சனையை கொண்டு
வந்துள்ளார். நாட்டில் எத்தனையோ
பிரச்சனைகள் இருக்கும் போது
இவருக்கு மட்டும் சமோசா
பிரச்சனை தான் பெரிதாக உள்ளது.
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க
மோடி சீனா செல்கிறார்.
டிரம்ப் புதின் சந்திப்பு எப்போது
நடைபெறும் என்று தெரியவில்லை.
இன்றைய தினம் கவிதைகள்
கட்டுரைகள் உள்ளூர் செய்திகள்
என அனைத்தும் சிறப்பாக இருந்தது.
உள்ளூர் செய்திகளுக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்து
ஆதரவு அளிப்பது நல்ல செயல் ஆகும்
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
தெய்வம் பத்திரிகை சுடச்சுட
தபாலில் வந்தது மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது. அனைத்து
கட்டுரைகளும் அருமையாக இருந்தது
பாராட்டத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?