வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 01.08.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 01.08.25



தமிழ் நாடு இ பேப்பரின் பிரியமான வாசக நட்புகள் பிளஸ் அன்பான ஆசிரியர் குழுமத்தினர் அனைவருக்கும் 

முதல் வணக்கம்.


பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் 

ஓபிஎஸ்.


இது குறித்து அவரே அரசியலில் எதுவும் நடக்கும் என்று கருத்தும் சொல்கிறார்.


பொது ஜனங்களாகிய நாமும் இந்த அரசியலில் எதுவும் நடக்கும் என்ற எண்ணத்திற்கு எப்போதோ வந்ததால் தானே, அரசியலில் அதிர்ச்சி என்ற உணர்வு எப்போதும் இல்லாமல் சகஜமாக இருக்கிறோம்.


என்ன.. மக்கள் தரும் பாடங்களையும், அரசியலில் எதுவும் 

நடக்கும் என்று எதையும் ஜீரணித்து கொள்ளும் பக்குவம் நமது அரசியல் வாதிகளுக்கு அதீதமாக வந்து விட்டது. அதனால் தானே எதற்கும் துணிந்தவர்களாக 

சகல காரியங்களையும் செய்யத் துணிகிறார்கள்...


இது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கமும் உண்டு.


அரசியல் எப்போது கல கலப்பு இல்லாமல் போரடிக்கிறதோ

அப்போது ஜனநாயகத் துக்கு ஆபத்து என்று அர்த்தம் என்று அடித்து சொல்லுகிறார் அரசியல் ஞானி ஒருவர்.( ஸாரி... பெயர் மறந்து விட்டது)


ஆகவே இந்த மாதிரி அதிரடி, பல்டி, பரபரப்பு 

நிகழ்வுகளால் ஜன நாயகம் தழைக்கட்டும்.

செழிக்கட்டும்.


பிரேமலதா விஜயகாந்த்தும் இதற்கு விதிவிலக்கு இல்லை. முதல்வரை சந்தித்து அவர் பங்குக்கு காயை நகர்த்தி விட்டார்.

வாழ்க நெளிவு சுழிவு அரசியல்... வளர்க ஜனநாயகம்.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வேர்க்கடலை பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. கடந்த இரண்டு வருட காலமாக தினசரி கட்டுரையில் கூறி யிருந்த படி ஒரு கைப்பிடி வருத்த வேர்க்கடலையை தவறாமல் சாப்பிட்டு 

வருகிறேன். நலமாக இருக்கிறேன்.


நலம் தரும் மருத்துவம் பகுதி மிகவும் கவனத்துடன் பதிவாகி வருகிறது என்பதற்கு 

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் சொல்லவா?


வேர்க்கடலை பற்றி குறிப்பிடும் போது,

வருத்த வேர்க்கடலையில் உப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் ' என்று ஞாபகமாக சுட்டிக் காட்டி இருந்தது.

எவ்வளவு நுட்பம் என்று 

வியந்து சிலிர்த்தேன்.

ஆசிரியர் குழுவினரின் அற்புதமான அக்கறையும் அன்பும் 

பாராட்டத் தக்கது.

வெல்டன்...வெல்டன்!


காய்கறி, கீரையை 

சட்னி செய்தாவது சாப்பிட வேண்டும் என்பதை படித்ததும் என் மனைவியின் முகம் போன போக்கைக் பார்க்கணுமே!


முகில் தினகரனின் அவசரப் புத்தி ஆணாதிக்க திலகங்களுக்கு சரியான பாடம் என்று சொல்லவா! சரியான சாட்டை என்று சொல்லவா?

சபாஷ்... சபாஷ்!


பெருமிழலைக் குறும்பர் நாயனார் வரலாறு அருமை.

இரு முறை படித்து மகிழ்ந்தேன்.


முனைவர் என்.பத்தி

யின் மன அழுத்தம் குறைப்போம் கட்டுரை 

இன்றைய தலைமுறை 

யினருக்கு கட்டாயம் தேவை.இதைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.


வழக்கம் போல் வட்டார செய்திகளின் அணிவகுப்பு அசத்தல்.

ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன்

எழுதிய நூலுக்கு 

(ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்)

வெளியாகி இருந்த 

மதிப்புரை வெகு ஜோர்!


கவிதைகளின் அணி வகுப்பும் கதம்ப மாலை போல் கன கச்சிதமாக இருந்தது.


அன்பான ஆசிரியர் குழுமத்தினர் அனைவருக்கும் 

நெஞ்சார்ந்த நன்றிகளும் 

வாழ்த்துகளும் என்றென்றும் நிச்சயம்.

தொடரட்டும் இந்த 

அதி அற்புதமான 

தீந்தமிழ்ப் பயணம்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%