வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 15.08.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 15.08.25

 


உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு 

விழாவில் கலந்து கொண்டோம்.

என் மனைவி தன் சிநேகிதிகளோடு 

அரட்டை அடித்துக் கொண்டிருந்தார் என்று தான் நான் நினைத்தேன்.

ஆனால் அருகில் போய் பார்த்த போது தான், கணவரின் குறிப்பு அறிந்து செயல் புரியும் நேர்த்தி யை உணர முடிந்தது.

( ஏற்கனவே பல அனுபவங்களில் நான் உணர்ந்தது தான் என்றாலும் இது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.


அப்படி என்ன செய்து விட்டார் என்று நீங்கள் ஆர்வமாக கேட்பது புரிகிறது.வெயிட் ப்ளீஸ்...


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தில் இருந்து வெளிவரும், அருள் தரும் தெய்வம் இதழை

அவர்களிடம் அறிமுகம் 

செய்து வைத்து தன்னைச் சுற்றி பெண்கள் கூட்டம் ஆர்வமாக உட்கார்ந்து கேட்கும் சூழலை உருவாக்கி இருந்தார்.

சடங்கு வீட்டில் நேரம் போவது தெரியாமல் 

அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தவர்களை சரியாக பயன் படுத்திக் கொண்டார் 

என்று தான் சொல்ல வேண்டும்.ரிசல்ட் என்ன தெரியுமா?

விசேஷ வீட்டில் வந்திருந்த அநேக பெண்கள் தெய்வம் பத்திரிகையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

கிடைத்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாக பயன்படுத்தி தெய்வம் இதழை அங்கே அறிமுகம் செய்து வைத்த என் மனைவிக்கு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்று புடவை எடுத்துக் கொடுத்து 

சமன் செய்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தெய்வம் இதழுக்கு எங்களால் முடிந்த 

அணில் சேவை இது என்பதை வாசக சொந்தங்களிடம் பகிர்ந்து கொண்டு சந்தோஷம் காண்கிறேன்.

சரி மேட்டருக்கு வருவோம்.


சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வருகை.


சரியான ராஜ தந்திர நடவடிக்கை இது.

டிரம்ப் நிச்சயம் தூங்க மாட்டார்!

அமெரிக்க அதிபரின் 

குண்டக்க மண்டக்க 

அரசியலுக்கு கிடைத்த பலத்த அடி என்றும் இதைச் சொல்லலாம்.

பாஸிட்டிவ்வாகவே நினைப்போம்.

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க 

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

இந்தியாவை வல்லரசு நாடுகள் என்ன உலகில் உள்ள எந்த நாடும் புறக்கணிக்க முடியாது.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெளியாகி இருந்த உலர் பழங்களின் சிறப்புகள் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிறப்பு.

இந்தப் பகுதியில் வருகின்ற விஷயங்களை படித்ததோடு நில்லாமல் தொடர்ந்து செயல் படுத்தி வந்தால் டாக்டர் பக்கம் போய் நிற்கும் நிலைமை வரவே வராது என்று அடித்துச் சொல்லலாம்.

பயணங்கள் முடிவதில்லை 

அமெரிக்க கட்டுரை அசத்தல்.அற்புதம்.

வெளியாகி இருந்த இரு சிறுகதைகளும்

ஜோர் ஜோர்!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கட்டுரை..

சிம்ப்ளி சூப்பர். தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இன்று எல்லோருக்கும் அறிமுகமான சுபாஷ்

சந்திர போஸ் பற்றிய 

கட்டுரை. 

மிகச் சரியாக சித்தரித்து எழுதப் பட்டிருந்தது மிகவும் சூப்பர் சூப்பர்!

கவிதைகள் பக்கம் தெவிட்டா தேனமுதம்

என்றால் மிகையாகாது.

இன்னும் சொல்லி மகிழ எத்தனையோ உண்டு.

தமிழ் நாடு இ பேப்பரின் அதி வேக வளர்ச்சிக்கு வாழ்த்துகள்...

வாழ்த்துகள்...

வெற்றிப் பயணம் தொடரட்டும்!


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%