விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது: ஷுபன்ஷு சுக்லா
Aug 24 2025
13

புதுடெல்லி:
“விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது” என விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரரும், விமானப்படை கேப்டனான ஷுபன்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஜூலை 15-ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்பினார்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை 18-ஆம் தேதி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம்-4 திட்டம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஷுபன்ஷு சுக்லா, “இந்த திட்டத்தை சாத்தியமாக்க உதவிய அரசாங்கம், இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று சுக்லா தெரிவித்தார். பின்னர், அவர் கூறும்போது, “விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது... ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?