
அடுத்தாண்டு (2026 - ஜூன், ஜூலை) அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகளுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழு வதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செப்., 5ஆம் தேதி நடைபெற்ற தென் அமெரிக்க கண்டத்திற் கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெனி சுலாவை 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வீழ்த்தியது. போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மெஸ்ஸி பேசுகையில்,”கடந்த காலத்தில் நான் 39 வயதில் உலகக் கோப்பையில் விளையாடுவதில் கடினமாக இருப்பதாக கூறியிருந் தேன். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. அது குறைவாக இருந்தாலும், எனக்கு அது நீண்ட காலம் என்பது தெரியும். உடல்நிலை நன்றாக உணரும் போது மகிழ்ச்சி யாக விளையாடுகிறேன். நன்றாக இல்லாத போது கடினமாக உணர்கிறேன். அதற்குப் பதிலாக விளையாடாமலே இருக்கலாம் என நினைக்கிறேன். தற்போ தைக்கு, ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்” என அவர் கூறினார். மெஸ்ஸியின் இந்த பேச்சு 2026ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கால்பந்து தொடரில் அவர் விளையாடு வாரா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது என ரசிகர்கள், விளை யாட்டு வல்லுநர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரி வித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?