இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் முயற்சியால் குடந்தை ஜவுளி உரிமையாளர் மூலம் 10 பேரிக்காடுகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் முயற்சியால் குடந்தை ஜவுளி உரிமையாளர் மூலம் 10 பேரிக்காடுகள்

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் முயற்சியால் குடந்தை ஜவுளி உரிமையாளர் மூலம் 10 பேரிக்காடுகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் - மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி, பெரும் காயங்கள் ஏற்படுகிறது, சிலர் உயிர் இழப்பு ஏற்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகிறார்கள், எனவே விலை மதிக்க முடியாத பொதுமக்கள் உயிரை பாதுகாக்கவும் கும்பகோணம் எஸ். பெரியசாமி முப்பனார் ஜவுளி உரிமையாளர் அவர்களை வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் நேரில் சந்தித்து விபத்துகள் உள்ளாகும் இடங்களில் 10 பேரிக்காடுகள் வைக்க வேண்டும், தாங்கள் செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் வலங்கைமான் காவல் வட்டார ஆய்வாளர் முத்துலெட்சுமி அவரிடம் அனுமதி பெற்று ஜந்து இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரிக்காடுகளை வலங்கைமான் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொழுது வலங்கைமான் காவல் வட்டார ஆய்வாளர் முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த 10 பேரிக்காடுகள் நேற்று ( 5- ந்தேதி) ஜந்து இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%