எங்கள் கூட்டணி சின்னமான குக்கரிலும் விசில் இருக்கிறது’ - தமிழிசை சவுந்தரராஜன்
Jan 25 2026
11
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தனிநபர் மீது இருக்கும் கடன் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழகம் மீண்டு வர வேண்டும் என்றால் தி.மு.க. மீண்டும் வரக் கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது.
த.வெ.க. தலைவர் விஜய்யை டெல்லிக்கு வரவழைத்தது சட்ட ரீதியான நடவடிக்கை தானே தவிர, அவரை கூட்டணிக்கு அழைப்பதற்காக அல்ல. விசில் எங்களுக்கு உடனடியாக தேவை இல்லை. எங்கள் கூட்டணி சின்னமான குக்கரிலும் விசில் இருக்கிறது. அதே சமயம், எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் ஜன.28ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய 3 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் பிப்.,7-ம் தேதி பணிநாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?