எறும்பூர் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம்

எறும்பூர் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம்


திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், எறும்பூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தி அன்று அருள்மிகு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி ,நேற்று முன்தினம் அருள்மிகு விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாரை ,தப்பட்டையுடன் விநாயகர் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து சமபந்தி விருந்தும், வான வேடிக்கையுடன், இரவு நாடகமும் நடைபெற்றது. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்ற விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%