காணாமல் போன பெண்ணை தேடச் சென்றபோது ஆற்றில் கார் விழுந்தது : 3 போலீசார் பலி
Sep 08 2025
13

உஜ்ஜைன், செப். 7–
மத்திய பிரதேசத்தில் காணாமல் போன பெண்ணைத் தேடச் சென்றபோது, ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
உஜ்ஜைன் மாவட்டத்தில் உன்ஹெல் காவல் நிலைய அதிகாரிகள் 3 பேர் நேற்று ஷிப்ரா ஆற்று பாலத்தில் சென்றபோது, அவர்களுடைய வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. ஆற்றில் வெள்ளம் ஓடி கொண்டிருந்தது.
இதனால் அவர்களால் உடனே நீந்தி வெளியே வர முடியவில்லை. ஆற்றில் சிக்கி 3 பேரும் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அவர்களில் காவல் ஆய்வாளர் அசோக் சர்மாவின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.
அவரின் உடல் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற 2 போலீஸ் அதிகாரிகளை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருள் சூழ்ந்ததால் அதிகாலை 2.30 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. இதற்காக, தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்டோர் படகுகள், டிரோன்கள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் சென்று காணாமல் போன 2 போலீசாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?