காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
Sep 06 2025
78
மாஸ்கோ:
சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் உச்சி மாநாடு செப். 31 மற்றும் ஆக.1 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பின் கலந்து கொண்ட்னர். இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. காருக்குள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.
காரணம் பிரதமர் மோடிக்காக 15 நிமிடங்கள் காத்திருந்து ரஷ்ய அதிபர் புதின் தனது காரில் அழைத்துச் சென்றார். கூட்டம் நடைபெறும் இடத்தை அடைவதற்கான பயணம் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர காரில் கூடுதலாக 45 நிமிடங்கள் செலவிட்டனர்.
இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காருக்குள் மோடியுடன் பேசியது என்ன என்பது குறித்த கேள்வி புதினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் அலாஸ்காவில் என்ன பேசினோம் என்பதை அவரிடம் (மோடியிடம்) கூறினேன்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆக.15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க - ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?