காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்

காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்

ஸ்ரீநகர்:

​காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது.


இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்​கான யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.


இடி​பாடு​களை அகற்​றும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அதிகபட்ச​மாக வைஷ்ணவி தேவி கோயி​லின் கத்ரா அடி​வாரப் பகு​தி​யில் 24 மணி நேரத்​தில் 200 மி.மீ. மழை பதி​வாகி உள்​ளது.


இதனால் சம்​மர் பாய்ன்ட் பகு​தி​யில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் 9-வது நாளாக நேற்​றும் யாத்​திரை நிறுத்​தப்​பட்​டது. எனினும், நிலச்​சரிவு ஏற்​பட்​ட​போது பக்​தர்​கள் யாரும் இல்​லாத​தால் உயி​ரிழப்பு எது​வும் ஏற்​பட​வில்​லை. அதே​நேரம், கோயி​லில் உள்ள பூஜாரிகள் தொடர்ந்து தின​மும் பூஜை செய்​து வரு​கின்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%