சிப்காட் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் கைது
- Sep 10 2025 
- 93 
 
    
ராணிப்பேட்டை:
சிப்காட் அருகே உறவினருடன் சென்ற இளம்பெண்ணை மடக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை, போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தெங்கால் பாலாறு மேம்பாலம் நவ்லாக் வழியாக நேற்று முன்தினம் இரவு 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உறவினர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
நகை மற்றும் பணம் பறிப்பு: நவ்லாக் அருகே இருவரும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நின்று தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இவர்களை, நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர்.
தனியாக நின்று பேசிக்கொண்டிருந்த இருவரையும் மடக்கி வாக்குவாதம் செய்தனர். பின்னர் இருவரும் அணிந்திருந்த நகை மற்றும் அவர்களிடமிருந்து பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இளம் பெண்ணுடன் வந்த உறவினரை, அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கடத்திச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் மற்றும் அவர்களது உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் உத்தரவின்டி தனிப்படை காவல்துறையினர் 3 பேரை தேடி வந்தனர்.
இதில், சிப்காட் அருகே அவரக்கரை பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்து விசாரித்தனர். இவர்கள், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
 
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 