கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக உதகை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொடர் விடுமுறையான கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன் னிட்டு நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக் கப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று வீடியோ எடுக்கவோ அல்லது டிரோன் விடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல் தண்ட னைக்குரியது என்பதால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ‘ஹிட்டன் ஸ்பாட்ஸ்’ என்று கூறி சமூக வலைத் தளங்களில் பதிவிடக்கூடாது. பாதுகாப்பு இல்லாததால் அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் அது போன்ற இடங்க ளுக்கு அத்துமீறி சென்று சமூக வலைத்தளங்களில் பதி விட்டால், அவர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட வன அலுவ லர் கவுதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?