விழுப்புரத்தில் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா, உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் ஜி.ஆர்.பி தெரு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மைக்கேல் (எ) மருதமலையைச் சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மணிகண்டன் (எ) ராம்போ (37), சிங்காரவேலன் (35), உத்திரமூர்த்தி (32), இளம்வழுதி (28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?