திருச்சி ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா.......
Mar 09 2026
14
திருச்சி மார்ச் 9 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்பாள் ஸ்வர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் விழா. எட்டாம் கால யாக சாலை பூஜை.. 8. 3. 2026 காலை 8:00 மணிக்கு மங்கள இசை தேசம் எங்கும் எட்டு திக்கிலும் கோவில் குடி கொண்டு இருக்கும் ஆர்ய வைஸ்ய குலம் காக்கும் அன்னை ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு எட்டாம் கால யாக சாலை பூஜை. காலை 9:30 நாடி சந்தனம் ஸ்பர்சாஹீதி, ஹோம திரவ்ய சமர்ப்பணம். காலை 10:30 மணிக்கு பூர்ணாஹீதி, தீபாராதனை, கடங்கள் யாக சாலையிலிருந்து புறப்பாடு. காலை 11:15 விமான மஹா கும்பாபிஷேகம் காலை 11:30 மணிக்கு ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம்... மாலை நிகழ்ச்சிகள். மாலை 5:30 மணிக்கு நிகிதா ஸ்ரீ பக்தி பாடல்கள். மாலை 5:50 மணிக்கு மலைக்கோட்டை வாசவி லலிதா மண்டலி பக்தி பாடல்கள். மாலை 6:30 மணிக்கு அமிர்தவர்ஷினி, ஹர்ஷிகா, நித்திஷா பக்தி பாடல்கள். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிகளுடன்.. ஜீர்ணோத்தாரண, ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த" வைஸ்ய குல குரு " ஸ்ரீ. ஸ்ரீ. பிரிக்யானந்தா சரஸ்வதி (பாலசுவாமி) சுவாமிஜி அவர்களால் வெகு சிறப்பாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ வாசவி அம்மனை ஜெய் வாசவி ஜெய் வாசவி என்று முழக்கமிட்டு வேண்டி அருள் பெற்றனர்.வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ர்வ ஸதகம் திரு M.G.R.குருக்கள் என்கிற 'சிவகாம சிரோண்மணி' சிவ ஸ்ரீ.ஸ்ரீ வெங்கடேச சிவாச்சாரியார் இம்மஹா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தார்கள். மூலவர், உற்சவர்க்கும் சிறப்பு அபிஷேகங்கள் வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து, ஏலக்காய் மாலையுடன், ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையும், தங்க ஆபரணங்களுடன் அலங்கரித்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. காலை, மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அனைவருக்கும் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகம். திருச்சி ஆர்ய வைஸ்ய நூட்ட இப்ப பன்றம் நகர்வாரும் கமிட்டி திருச்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?