செய்யாறு வட்ட முத்தமிழ் சங்க தலைவர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

செய்யாறு வட்ட முத்தமிழ் சங்க தலைவர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

செய்யாறு ஆக .24,


செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் எறும்பூர் கை .செல்வகுமார் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு முப்பெரும் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு டவுன், அருள்மிகு பட்சீஸ்வரர் கோயில் அருகில் உள்ள பாரதி மழலையர் பள்ளியில் உள்ள பிரார்த்தனை கூட்ட அரங்கில் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.


விழாவிற்கு மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் பா. இந்திரராசன் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி, சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்து, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து ,நல திட்ட உதவிகளை வழங்கிப் வாழ்த்திப் பேசினார்.


மாவட்ட பொருளாளரும், திருவண்ணாமலை டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளருமான மா. சின்ராஜ், பொதுச்செயலாளர் தேவிகாராணி, நெறியாளர் வாசுதேவன் , செய்யாறுரெட் கிராஸ் தலைவர் ஏ .பி .மாதவன் ,புலவர் மெய். பூங்கோதை, பாவலர் மோகன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி மு. சண்முகம் வரவேற்றார்.


கருத்தாளர் புலவர் ந. கனக சபை, வழக்கறிஞர் கே. விஸ்வநாதன் ,பேராசிரியர் முனைவர் கு .கண்ணன் ,அரிமா சங்க மண்டல தலைவர் வி.தெய்வசிகாமணி,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தலைவர் எறும்பூர் கை. செல்வகுமார், செயலாளர் ம. பழனி, பொருளாளர் க. கோவேந்தன், உள்ளிட்ட துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உள்ளிட்டோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.பின்னர் சுதந்திர தின விழா போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு , இரவு உணவு வழங்கப்பட்டது. விழா முடிவில் செயலாளர் ம. பழனி நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%