தென் கொரியாவில் 30-ந்தேதி சீன அதிபர் ஜின் பிங்- டிரம்ப் சந்திப்பு

தென் கொரியாவில் 30-ந்தேதி சீன அதிபர் ஜின் பிங்- டிரம்ப் சந்திப்பு



அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன்,


தென் கொரியாவில் ஆசிய- பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார்.


மறுநாள் (30-ந்தேதி) அவர் சீன அதிபா ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார். டிரம்ப் இன்று இரவு ( வெள்ளிக்கிழமை) மலேசியா செல்வார் என்றும் அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென்கொரியா செல்ல இருக்கிறார் என அவர் கூறி இருக்கிறார்.


அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது டிரம்ப்பும், ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%