நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்



புதுடெல்லி: டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.


இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான ஒட்​டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. டெலாய்ட்​டின் முந்​தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதி​கம்.


தேவை மற்​றும் கொள்கை சீர்​திருத்​தங்​கள் அதி​கரித்து வரு​வ​தால் நடப்​பாண்​டில் வளர்ச்சி சிறப்​பாக இருக்க வாய்ப்​புள்​ளது. அடுத்த ஆண்​டிலும் இதேபோன்ற வளர்ச்சி தொடரவே அதிக வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு டெலாய்​ட்​ தெரி​வித்​துள்​ளது.


சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது


பத்​தனம்​திட்டா: கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார​பால​கர் சிலைகள் மற்​றும் அதன் பீடத்​துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்​றி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.


இந்த பணிக்​குப் பிறகு ஒப்​படைக்​கப்​பட்ட சிலை​யில் 4 கிலோ தங்​கம் மாய​மான​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த கேரள உயர் நீதி​மன்​றம், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.


இந்​நிலை​யில், திரு​வாங்​கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்​னாள் நிர்​வாக அதி​காரி முராரி பாபுவை எஸ்​ஐடி அதி​காரி​கள் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். இதையடுத்​து, பத்​தனம்​திட்டா நீதி​மன்​றத்​தில் நேற்று அவர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். பின்​னர் அவரை நீதி​மன்ற காவலில் வைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%