பிறந்துள்ள தைமகளே!

பிறந்துள்ள தைமகளே!



பிறந்துள்ள தைமகளால் வழிகள் வாய்க்கும்

     பீடுடைய வாழ்க்கைக்கு உறுதி சேர்க்கும்

திறந்தமனம் என்றென்றும் பெருமை வார்க்கும்  

     தீர்வுகளை நமக்களித்து திறமை கோர்க்கும்

சிறந்தசெயல் செய்திட்டே உலகை ஈர்க்கும்

     சிந்தனையால் இன்னலைத்தான் இன்றே தீர்க்கும் 

துறந்திடவா வாழ்க்கையென்று கேள்வி கேட்கும் 

     தூணாக நம்பிக்கை நம்மை தேற்றும் 


செங்கரும்பின் இனிப்பைப்போல் இனிமை ஏறும்

     செவ்வான நீளம்போல் எண்ணம் மாறும்

தங்கிடுமே மங்கலமும் நமது வாழ்வில்

     தந்திடுமே மகிழ்ச்சியைத்தான் என்றும் நன்றாய்

பொங்கிடுமே பொங்கலுந்தான் வாழ்த்து சொல்லி 

     பொலிவாக ஒளிரட்டும் நமது பண்பு

எங்கெங்கும் மலர்ச்சியினை நாமும் கொள்வோம்

     எழுச்சியாலே இவ்வுலகை நொடியில் வெல்வோம்


உழவாலே உலகனைத்தும் உய்யும் உண்மை

     உழவர்கள் உயர்விற்கு செய்வோம் நன்மை

சுழல்கின்ற புவிதனக்கு கதிரோன் ஈயும்

     சுடரொளியால் வளங்களெலாம் கூடும் திண்மை

உழல்கின்ற வறுமையெலாம் ஒழிந்தே நல்ல

     உழைப்பினாலே உயருகின்ற விழிப்பை நெய்வோம் 

இழந்திடவா பண்பாடு இல்லை இல்லை

     ஈடில்லா தமிழர்க்கு வானம் எல்லை! 



கவிஞர் மு.வா.பாலாஜி*

ஓசூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%