அகமதாபாத்,
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு கொழும்பில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் மோதுகின்றன.
சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மார்க்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை நாளை (22-ந் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசியாக இதே மைதானத்தில் (அகமதாபாத் ) நடைபெற்ற ஆட்டத்தில் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி எதிர்கொள்ளும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவும் இந்த தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்ஷர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?