கடல்

கடல்


நிலைமண்டில

         ஆசிரியப்பா!


உவர்ப்புத் தன்மை

உன்னத மாக

உவரெனும் கடலும்

உள்ளே காணுமே!


முந்நீர் என்றும்

முன்னோர் கூறுவர்

சிந்தும் உப்பைச்

சீராய்த் தருமே!


இயற்கைப் படைப்பில்

இனிமை கடலே

நயன்மைப் பொருள்கள்

நல்கும் கடலே!


ஆழம் அதிகம்

கொண்ட கடலே

வாழும் மீனவர்க்

குதவும் வண்ணமாய்!


பலவாய் உயிர்கள்

பாங்காய் உதவும்

கலையாய் விளங்கிக்

கண்ணாய்த் துலங்கும்!


புவிக்குத் தோலாய்

பூத்துக் காணும்

குவிக்கும் நன்மை

கூறவும் கூடுமோ!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%