அழகு

அழகு



நீ சிரிக்கும் அந்த நொடி அழகு.

எதுவும் பேசாமல் அகண்ட விழிகளுடன் நீ என்னைப் பார்ப்பது அழகு.

என் அருகில் நீ இருப்பதே கொள்ளை அழகு.

நம் இருவருக்கும் இடையே வரும் சின்ன சண்டைக்குப் பின் உன் மெல்லிய உதட்டால் மௌனமாய் என்னை முத்தமிடுவது அழகு.

என்னைப் பார்த்து பார்த்து நீ சிரிப்பது அழகு.

பெரிய கனவுகள் இல்லாத நம் வாழ்க்கை அழகு.

நாள்தோறும் என்னை நீ கிள்ளிவிட்டு ஓடுவது அழகு.

என் பெயரை நீ என் காதருகே அழைப்பது அழகு.

உலகத்தை மறந்து நீயும், நானும் நாணத்துடன் மெல்ல, மெல்ல நடனமாடுவது அழகு. 

நீ அழகு நான் அழகு.

இதற்குப் பெயர்தான் காதல் அழகு.


அன்புடன்

உ.மு.ந.ராசன் கலாமணி

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%