விட்டில் பூச்சிகள்

விட்டில் பூச்சிகள்



விளக்கின் ஒளியில் 

மயங்கித் துள்ளி

சிறகுகள் கருகும் 

விட்டில் பூச்சிகள் போல...

வெளிநாட்டு கனவின் 

ஜொலிப்பில்

விழிகளை இழக்கும் 

இளைஞர்களே!


டாலர், யூரோவென 

மின்னும் பெயர்கள்

வாழ்க்கையின் 

முழுப் பொருளல்ல,

வேரில்லா மரமாய் 

அங்கே நின்றால்

நிழலும் நமக்குக்

கிடைக்காது!


கடன் சீட்டுகளில்

கையெழுத்திட்டு

கனவுகளைக் 

கப்பலில் ஏற்றி

கரை சேருமுன் 

மூழ்கி விடாதீர்!

கடல் அழகு தான்

ஆனால் கருணை 

இல்லை அங்கே!


தாய்மண் விட்டு 

ஓடும் ஆசை

தங்கம் தேடும் 

பயணம் அல்ல...

திறமை இருந்தால் 

எந்த மண்ணும்

உன் காலடியில் 

தழைக்கும்!


விளக்கின் ஒளி 

வழி மட்டும் காட்டும்!

விழிப்புணர்வு ஒளிதான் 

வாழ்வைக் காக்கும்!


இன்றே அதை 

இங்கிதமாய் ஏற்றுங்கள்!

எதிர்காலத்தைச் செதுக்கி

ஏற்றம் காணுங்கள்

இளைஞர்களே!

------

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%