யமுனை நதிக்கரையில் அடர்ந்த புன்னை மர நிழலில் ராதையும், கண்ணனும் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள்.
'உன்னை விட்டுப் பிரிந்து எத்தனை நாட்களாகி விட்டன; ராதை!' உள்ளார்ந்த மன நெகிழ்ச்சியில் அங்கலாய்த்தான், கண்ணன்.
' அப்படியா? நான் உன்னைவிட்டு பிரிவதுமில்லை; விலகுவதுமில்லை; என்றல்லவா நான் நினைக்கிறேன்.' என்றாள் ; ராதை, மென்னகையுடன்.
மதுரா சென்றது முதல் நான் உன்னை சந்திக்கவே இல்லையே! நீ என்னதான் சொல்கிறாய்?' என்று வினவினான் ராதேயன்.
' கண்ணா! நான் எப்போதும் உன்னிலேயே இருக்கிறேன்.
உன்னில் உறைந்திருக்கும் என் உயிர் சக்தியால் தானே கம்ஸ வதம் நடந்தேறியது!
நான் இல்லையேல் நீ இல்லவே இல்லை.
ஏழுலகையும் தாங்கும் கமலனே!
நான் உன்னைத் தாங்குவதால் அன்றோ; நீ அனைத்தையும் தாங்கி நிற்கிறாய்!
உன்னில் சரி பாதி நானல்லவா?
'ராதை! இவ்வாறு உரைப்பது எனக்கே நகைப்பை மூட்டுகிறது.
'அவ்வாறானால் நீ எனக்கு ஒரு சான்று கூறி நிரூபி.' என்றான்.
கல கலவென சிரித்த ராதை,'நான் உன்னில் உறையாமலா குவலயாபீடம் என்ற வேழத்தை சாய்க்கும் ரௌத்திர தருணத்திலும், என் நினைப்புதான், உனக்கு.
அதன் தந்தங்களை வேரோடு பிடுங்கி எறியும் கணத்தில், தந்தங்களின் அடியில் இருந்த முத்துக்களை எடுத்து மாலையாக்கி உன் நண்பனின் வழியாக எனக்கு அனுப்பி வைத்தாய்!
வேறு ஏதும் சான்று வேண்டுமா; சொல்' என்றாள்.
மாயக்கண்ணனின் மன மயக்கம் எங்கோ மறைந்து போக; ராதையிடம் சரணடைந்தான்;கண்ணன்.
உயிரொளியில் உன்னதம் கலந்து உறைந்தது
ராதே கிருஷ்ணா!

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?