அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் ஒன்பது மாவோயிஸ்ட்கள் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஒடிசாவின் நவரங்பூர் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சரணடைந்த நக்சலைட்களில் ஏழு பெண்கள் உள்பட ஒன்பது பேருக்கு மொத்தம் ரூ. 47 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
நக்சலைட்கள் நவரங்பூர் மற்றும் சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் சரணடைந்ததன் மூலம் நவரங்கபூர் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24, 2011 அன்று பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ ஜகபந்து மாஜி மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பி.கே. பட்ரோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது உள்பட நக்சல் வன்முறையின் பல சம்பவங்களை இந்த மாவட்டம் கண்டுள்ளது.
மாநிலத்தின் 30 மாவட்டங்களில், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் இப்போது ஏழு மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. அவை, காந்தமால், காலஹண்டி, போலங்கிர், மல்கான்கிரி, கோராபுட், ராயகடா மற்றும் பௌத் ஆகியவையாகும்.
மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கு நெருங்கி வரும் நிலையில், நவரங்பூர் மாவட்டம் நக்சலைட்டுகளிடமிருந்து விடுபட்டிருப்பது ஒரு பெரிய சாதனையாகும் என்று காவல்துறை கூறியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?