tamilnaduepaper
❯ Epaper

மனம் திற

மனம் திற
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

"ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக் குடுத்த என் அக்கா கணவனை விட்டுட்டு திரும்பி வந்து இப்ப எங்க வீட்லதான் இருக்கிறா. நீங்க வர்ற நேரத்துல இங்கே இருக்க வேண்டாம்னு கோயிலுக்குப் போயிருக்கா… " -தன்னைப் பெண் பார்க்க வந்த பிரகாஷிடம் திவ்யா சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது அவளது பெற்றோர் கல்யாணிக்கும் ராகவனுக்கும்.

 

திவ்யாவின் அக்கா புஷ்பா கல்யாணம் ஆகி ஒரு வருஷத்திலேயே கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தெரடர்பு என்று அவனுடன் வாழாமல் திரும்பி வந்துவிட்டது உண்மைதான்.

 

ஆனாலும் திவ்யாவைப் பெண் பார்க்க வருபவர்களிடம் மூத்த மகள் புஷ்பாவைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தார்கள் கல்யாணியும் ராகவனும். விஷயம் தெரிந்தால் திவ்யாவின் கல்யாணம் பாதிக்கலாம் என்பதால், மாப்பிள்ளை வீட்டார் வரும்போது, புஷ்பாவைக் கோயிலுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

 

திவ்யாவின் கல்யாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரிந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்றும் திட்டம் போட்டிருந்தார்கள்.

 

‘ஆனால்... யாருக்காக அந்த உண்மையை மறைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த திவ்யாவே மாப்பிள்ளை வீட்டாரிடம் இப்படி சொன்னால்?’

 

கல்யாணியும் ராகவனும் கையைப் பிசைந்து கொண்டு நிற்க...

 

"உங்க அக்கா புஷ்பாவைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் இங்கே உங்களை பெண் பார்க்க வந்தோம். என்னோட அண்ணன் புஷ்பாவைப் பற்றி கேள்விப்பட்டு அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான். அப்படியே உங்களை நானும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு பொண்ணு பார்க்க வந்தேன்..." –மாப்பிள்ளை பிரகாஷ் சிரித்தபடியே சொன்னான்.

 

‘ஆஹா... உண்மையா வெளிப்படையா இருக்கிறதுல இப்படியொரு நல்லது இருக்கா?’ உள்ளூற சந்தோஷப்பட்ட கல்யாணியும் ராகவனும் ஒருசேரச் சொன்னார்கள்...

 

"புஷ்பாவைப் பற்றி சொல்லாம விட்டதுக்கு எங்களை மன்னிச்சுக்குங்க! புஷ்பா விரும்பினா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே நடத்த தயாரா இருக்கோம்!"

 

-கீர்த்தி

ராசி பலன்

எதிர்பார்த்து இருந்துவந்த சில பணிகள் நிறைவு பெறும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமித்தமான... மேலும் படிக்க

தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய... மேலும் படிக்க

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். இணையம் மற்றும்... மேலும் படிக்க

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களில் இருந்துவந்த தெளிவு பிறக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம்... மேலும் படிக்க

தன வருவாய் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அரசால் அனுகூலம் ஏற்படும். வியாபார நிமித்தமான புதிய சிந்தனைகள் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் பழைய... மேலும் படிக்க

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருட்ச்சேர்க்கைகள்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில... மேலும் படிக்க

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள்... மேலும் படிக்க