tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, நவ. 27–
மதுரையில் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் அடிதடி நடந்த போதிலும், எந்தசலசலப்பும் இல்லை. கட்சியில் பணி புரிவதில் போட்டி.. அவ்வளவே என்று மாஜி மந்திரிகள் சமாளித்தனர்.
     மதுரை மாநகர் மாவட்ட  அதிமுக கள ஆய்வுக் கூட்டம் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. அப்போது  உறுப்பினர் சேர்க்கை குறித்து விசாரித்தனர். அந்த சமயத்தில்   இளஞ்செழியன்,  ராமச்சந்திரன் ஆகியோர் மேடைக்கு வந்தனர். பகுதி நிர்வாகிகளை விசாரிப்பது போல மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் என்றனர்.இதை அடுத்து மோதல் வெடித்தது. செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள்ஓடி வந்து,   மேடையில்  இருந்து இரண்டு நிர்வாகிகளையும்  கீழே தள்ளி  கடுமையாக தாக்கினர்.  இதனால் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் சமாதானம் செய்தனர். 
இதன்பிறகு  மேடையில் அமர்ந்திருந்த  அதிமுகவில் புதிய வரவு டாக்டர் சரவணனுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.  கோஷமிட்டவர்களை நத்தம் விசுவநாதன் அமைதிப்படத்தினார். என்ன நடந்தது என்று எங்களுக்கே இன்னும் புரியவில்லை என்றார். அப்போது சிலரது பெயர்களை கூறி  கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதாக கூச்சலிட்டனர்.இதையடுத்து நிலைமையை சமாளிக்க போலீசார் உள்ளே வந்தனர். அவர்களை இது கட்சி விவகாரம். போலீசார் தலையிட வேண்டாம் என நத்தம் விசுவநாதன்கூறினார். 
    பின்னர் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " கட்சியில் எந்த மோதலும் இல்லை. அதிமுகவில் பிரச்சனை இருப்பது போல சிலர் பூதாகரமாக்க முயல்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. அதிமுகவில் சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது அவ்வளவே.  நிர்வாகிகள் சிலர்  பேசுவதற்கு அனுமதி கேட்டனர். அதை தருவதாக சொன்னோம். பிரச்சனை முடிந்து விட்டது. கள ஆய்வு முடிந்தவுடன் வாய்ப்பு தருவதாக சொன்னோம். அதற்குள் சிலர் எழுப்பிய சத்தத்தை பெரிதாக்கிவிட்டனர்" என்று விளக்கம்அளித்தனர்.

ராசி பலன்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள்... மேலும் படிக்க

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.... மேலும் படிக்க


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த... மேலும் படிக்க

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில்... மேலும் படிக்க

பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகக்... மேலும் படிக்க

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன்... மேலும் படிக்க

திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம்... மேலும் படிக்க