tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

சென்னை, பிப்.3

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

 

ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. தி.மு.க.வின் வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.

சாதனை பிரசாரம்

அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் தொகுதியின் ஒவ்வொரு வீடாகச் சென்று கழகத்தின் மூன்றரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கழக அரசின் சாதனைத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என்று ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர்.

 

தி.மு.க. அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.

உதிரிகளை தூண்டிவிடுவதா?

திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அ.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன. தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற தி.மு.க. அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ. அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு வருகிற 5ம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னோட்டம்

நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும். 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராசி பலன்

விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள்... மேலும் படிக்க

நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான... மேலும் படிக்க

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான... மேலும் படிக்க

சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.... மேலும் படிக்க

நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தன வரவுகளில் ஏற்ற,... மேலும் படிக்க

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய... மேலும் படிக்க